in

6 ஆயிரம் லிட்டர் கொள்முதல் அலுவலர் அதிகாரிகளுக்கு பாராட்டு

6 ஆயிரம் லிட்டர் கொள்முதல் அலுவலர் அதிகாரிகளுக்கு பாராட்டு

 

நாகையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் லிட்டர் கொள்முதல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அதிகாரிகளுக்கு பாராட்டு; ஒரு லட்சம் வரை இலக்கு நிர்ணயம் பணியாற்றிட ஊக்குவிப்பு.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை இன்று நாகப்பட்டினம் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் அண்ணாதுரை பல்வேறு இடங்களில் மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக தேவூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் பதிவேடுகள் மற்றும் இயந்திரங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அண்ணாதுரை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்.

இதில் படிப்படியாக நாகப்பட்டினம் மாவட்டம் பால் உற்பத்தியில் வளர்ச்சி அடைந்து தற்போது சிறப்பாக நாள் ஒன்றுக்கு 6000 லிட்டர் வரை கொள்முதல் செய்யப்படுவதற்கு ஆவின் அதிகாரிகளுக்கும் கூட்டுறவு உற்பத்தியாளர் சங்கத்தினருக்கும் வாழ்த்து தெரிவித்தார்‌.

தொடர்ந்து ஒரு லட்சம் லிட்டருக்கு கொள்முதல் செய்வதற்கு பயனாளிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதற்கு தேவையான நலத்திட்ட உதவிகளை கேட்டு பெற்றிடவும் அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து தேவூர் பாரதியார் தெருவில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட வரும் வீடுகளை நேரில் ஆய்வு செய்து பயனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தொடர்ச்சியாக கீழ்வேளூர் திருக்குவளை சாட்டியக்குடி உள்ளிட்ட ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

What do you think?

அடித்து கொடுமைபடுத்தியதாக…. பிரபல Utuber விஷ்ணு மீது நடிகை அஸ்மிதா போலீசில் புகார்

நான் மோசடி செய்யவில்லை…அவர் தான் என்னை காதலித்து ஏமாற்றிவிட்டார்… பாண்டியன் ஸ்டோர்ஸ் ரிஹானா