அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை துவக்கினர்.
ஓய்வு பெற்ற ஆசிரியர் ஊழியர்களுக்கு 18 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள மாத ஓய்வூதத்தை உடனடியாக வழங்க வேண்டும். 7வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் என்.எம்.ஆர் மற்றும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
ஆசிரியர், ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அரசு நிறைவேற்றவில்லை.

இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர், மற்றும் ஓய்வூதிய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று துவங்கப்பட்ட இந்த காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம் இன்று 2வது நாளாக நடந்தது. ஆசிரியர்கள், ஊழியர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் இன்று 2 வது நாளாக பணிகளை புறக்கணித்து பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் முன்பு அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டப் பந்தலில் ஆசிரியர்கள், ஊழியர்கர் தங்களது பல்வேறு அம்ச கோரிக்கைகளை கண்டனம் முழக்கங்களாக எழுப்பியும், அவற்றை அரசு நிறைவேற்ற வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.

