நாமக்கல் மோகனூர் சிவ ஆலயத்தில் சித்திரை மாத பெளர்ணமியை முன்னிட்டு அன்ன அபிஷேக ஆராதனை
நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி கரை மீது அமைந்துள்ள அருள்மிகு மதுகரவேணி சமேத அசலதீபேஸ்வரர்சிவன் கோயிலில் இங்கு சித்திரை மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நேற்று மூலவருக்கு அசலதீப ஸ்வரருக்கு பஞ்சாமிருதம் தேன் பால் தயிர் மஞ்சள் சந்தனம் என சிறப்பு அபிஷேகமும், பின்னர் சிறப்பு அலங்காரமாக அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு, அர்ச்சனை செய்த பின், மகா தீபம் காண்பிக்கப்பட்டது.
பின்னர் மோகனூர் காவிரியாற்றில் இறைவனுக்கு படைத்த சாதத்தை மீன்களுக்கு உணவாக அளிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.