கன்னட சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் அனிருத்
கேஜிஎஃப் படத்திற்குப் பிறகு யாஷின் வரவிருக்கும் படமான டாக்ஸிக் (Toxic) தற்போது தயாரிப்பில் உள்ளது.
இந்த படம் மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படைப்புகளுக்கு பெயர் பெற்ற கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள டாக்ஸிக் Pan India Movie..யாக உருவாகிறது.
சுவாரஸ்யமாக, இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் ஆரம்பத்தில் டாக்ஸிக் டீசரில் பணியாற்றினார்.
படத்திற்கு அவரே இசை அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டாக்ஸிக்கிற்கு இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தரை குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பத்தாண்டுகளில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெற்றிகரமான இசையமைப்பாளர்களில் ஒருவராக பயணிக்கும் அனிருத் டாக்ஸிக் முலம் கன்னட சினிமாவில் அறிமுகமாகிறார்.
அனிருத் டாக்ஸிக் படத்திற்கு இசையமைக்க அனிருத் 12 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார்.


