in

கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

 

கடலங்குடி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் துவக்கி வைத்து, கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து செலுத்துவதை பார்வையிட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டாரத்திற்குட்பட்ட கடலங்குடி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் துவக்கி வைத்து,கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து செலுத்துவதை பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி, 2025-26-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் கிராமப்பகுதிகளில் உள்ள கால்நடைகளின் நலன்காக்க சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் தமிழ்நாட்டின் 388 ஊராட்சி ஒன்றியங்களிலும் மாதம் ஒரு முகாம் வீதம் இந்த ஆண்டில் 4656 முகாம்கள் நடத்துவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் மாதத்தில் 5 முகாம்கள் நடத்தப்பட்டு, 60 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் கால்நடை மருத்துவர் குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில், கால்நடைகளுக்கு தடுப்பூசி, சிகிச்சை செயற்கை முறை கருவூட்டல், செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்ததுவது, மலடு நீக்கம், குடற்புழு நீக்க மருந்து வழங்குதல் உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும், நவீன கருவிகளைக் கொண்டு கால்நடைகள் பரிசோதனை செய்யப்படுகிறது. இம்முகாமில் சுமார் 850 கால்நடைகள் வளர்ப்போர் கலந்து கொண்டு, பயன்பெற்றுள்ளனர். முன்னதாக, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டாரத்திற்குட்பட்ட கடலங்குடி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமில் 6 கால்நடை வளர்ப்போர்களுக்கு தாது உப்பு கலவை மருந்துகளையும், சிறந்த 6 கால்நடை வளர்ப்போர் மற்றும் கால்நடைகளுக்கு பரிசுகளையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் சுகுமார், உதவி இயக்குநர் அன்பரசன், கால்நடை உதவி மருத்துவர்கள் வினோதா, சந்தோஷ் குமார் களப்பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

திமுகவின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்.

ஸ்ரீ அருணாசலேஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா.