in

அனில் கபூர் தாயார் மறைவு

அனில் கபூர் தாயார் மறைவு

 

மூத்த நடிகர் அனில் கபூர் மற்றும் போனி கபூர் தாயார் நிர்மல் சுரிந்தர் கபூர் வெள்ளிக்கிழமை (மே 2) தனது 90வது வயதில் காலமானார்.

மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அவர் காலமானார்..

பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்த நேரில் வந்தனர். இறுதிச் சடங்கு மே 3 சனிக்கிழமை காலை மும்பை எஸ்.வி. சாலையில் உள்ள பவன் ஹான்ஸ், வைல் பார்லே மயானத்தில் நடைபெறும்.

நிர்மல் கபூர் மறைந்த திரைப்பட தயாரிப்பாளர் சுரீந்தர் கபூரின் மனைவியும், போனி, அனில், சஞ்சய் மற்றும் ரீனா கபூர் மர்வா ஆகியோரின் தாயாரும் ஆவார்.

What do you think?

ஜனநாயகன் படபிடிப்பு நிறுத்தம்

அணில் போல தாவும் விஜய்..இக்கு கைதட்டுங்க…. கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்