‘ஆனந்தா’ ஆன்மீக பட விழா.. துர்கா ஸ்டாலின் பங்கேற்பு
சுரேஷ் கிருஷ்ணா தமிழ் மட்டும் இல்லாம தெலுங்கு, ஹிந்தினு எல்லா மொழிகளிலும் கலக்குனவரு.
இப்போ அவர் இயக்கியிருக்கிற ‘அனந்தா’ படம் மேல பெரிய எதிர்பார்ப்பு இருக்கு.
இந்தப் படத்துக்கு நம்ம ‘தேனிசைத் தென்றல்’ தேவா தான் மியூசிக் போட்டிருக்காரு.
பாட்ஷா, அண்ணாமலை படங்களுக்கு அப்புறம் இந்த காம்போ மறுபடியும் சேர்றதுனால ரசிகர்களுக்கு பழைய நினைவுகள் எல்லாம் வருது.
படத்துல நடிகை சுகாசினி, ஒய்.ஜி. மகேந்திரன் மற்றும் நிறையப் பேர் நடிச்சிருக்காங்க.
சமீபத்துல ராயப்பேட்டையில இருக்குற மியூசிக் அகாடமியில் இந்தப் படத்தோட டீசர் மற்றும் பாட்டு ரிலீஸ் ஃபங்ஷன் ரொம்ப கிராண்டா நடந்துச்சு.
இதுல தேவா, சுகாசினி, பா.விஜய், பிக்பாஸ் அபிராமி, தலைவாசல் விஜய், பாடகர் மனோ, நிழல்கள் ரவி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுன்னு ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே வந்து விழாவைச் சிறப்பிச்சாங்க. அதைத் தொடர்ந்து நேத்து நுங்கம்பாக்கத்துல இருக்குற ஒரு ஹோட்டல்ல படத்தோட டிரெய்லர் ரிலீஸ் ஃபங்ஷன் நடந்துச்சு.
இதுல ஒரு ஸ்பெஷல் கெஸ்ட் யாருன்னா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் அவங்கதான்.
அவங்க கையால ‘அனந்தா’ படத்தோட டிரெய்லரை ரிலீஸ் பண்ணிருக்காங்க. ரொம்ப வருஷம் கழிச்சு சுரேஷ் கிருஷ்ணா – தேவா கூட்டணி வர்றதுனால, இந்தப் படம் கண்டிப்பா ஒரு தரமான படமா இருக்கும்னு சினிமா வட்டாரத்துல பேசிக்குறாங்க.


