in

விஜய் ரசிகர்களை என் பக்கம் இழுக்கிறேனா

விஜய் ரசிகர்களை என் பக்கம் இழுக்கிறேனா

 

மூத்த நடிகர்கள் ஈகோ பார்த்த காலம் போய் Cameo Role..இல் நடிக்கும் Trend வந்து விட்டது.

விஜய் நடித்த தி கோட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கிளைமாக்ஸ் காட்சியில் சிறிது நேர தோன்றினாலும் ரசிகர்களை சிதறடித்து விட்டார்.

அந்த படத்தில் விஜய் சிவகார்த்திகேயனிடம் தனது துப்பாக்கியை கொடுத்து என்னுடைய இடத்தில் இருந்து நீ தான் பார்த்து கொள்ள வேண்டும் என்பது போல் காட்சி அமைத்திருக்கும்.

இந்த கட்சியை பலரும் பல விதமாக திரித்து கூறி வந்தனர்.

தற்பொழுது விஜய் அரசியலுக்கு சென்றிருப்பதால் அவருடைய இடத்தை சிவகார்த்திகேயன் வசம் ஒப்படைத்து விட்டார் என்றெல்லாம் பேசிவருகின்றனர்.

சிவகார்த்திகேயனை குட்டி விஜய், திடீர் தளபதி என்றெல்லாம் பட்டம் கொடுத்திருக்கின்றனர்…இப்படி பட்ட விமர்சனங்களுக்கு அடிக்கடி சிவகார்த்திகேயன் பதிலடி கொடுத்தும் வருகிறார் .

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ருக்மணி வசந்த், நடித்துள்ள மதராசி திரைப்படத்தின் டிரைலர் விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது யார் என்ன பேசினாலும் அண்ணன் எப்பொழுதும் அண்ணன் தான் தம்பி எப்பொழுதும் தம்பிதான் அதை யாராலும் மாற்ற முடியாது எல்லோரும் பேசுவது போல் அவர் நினைத்திருந்தால் அந்த துப்பாக்கியை கொடுத்திருக்க மாட்டார் நானும் அதை வாங்கி இருக்க மாட்டேன்.

விஜய் ரசிகர்களை என் வசம் இழுக்க பார்க்கிறேன் என்றெல்லாம் என்னை குறை கூறுகிறார்கள் யார் ரசிகர்களை என்னால் இழுக்கவும் முடியாது, ரசிகர்களை சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டம் என்பதும் எனக்கு தெரியும்.

ஒரு நடிகனுக்கு ரசிகர் தான் பெரிய பலம் என்பதும் எனக்கு தெரியும் நான் மான் கராத்தே பட விழாவில் ஏஆர் முருகதாஸ், ஷங்கர் போன்ற பெரிய இயக்குனர்கள் படத்தில் நடிக்க விரும்புவதாக கூறினேன்.

அப்பொழுது என்னை எல்லோரும் கேலி செய்தார்கள் ஆனால் இப்பொழுது AR முருகதாஸின் மதராசி படத்தில் நடித்து விட்டேன் இறைவனுக்கு நன்றி என்று கூறினார்.

What do you think?

ஸ்ரீதிவ்யா…வுக்கு விரைவில் டும்டும்

காதலரின் புகைப்படத்தை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்