ஸ்ரீதேஜா..வை மருத்துவமனைக்கு காண சென்ற அல்லு அர்ஜுன் அப்பா
ஹைதராபாத் சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 பிரீமியர் ஷோ…வின் போது அல்லு அர்ஜுனை காண ரசிகர்கள் கூட்டம் கூடியதால் நெரிச்சலில் சிக்கி ரேவதி என்ற பெண் இறந்தார்.
அவரது ஒன்பது வயது மகன் ஸ்ரீதேஜா ஐந்து மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஸ்ரீதேஜா படிப்படியாக குணமடைந்து வருவதால் அவரை மறுவாழ்வு மையத்தில் சில நாட்கள் தங்கி இருக்க அறிவுறுத்தப்பட்டது.
அங்கு மாற்றப்பட்ட சிறுவனை காண அல்லு அர்ஜுனனின் தந்தை சென்றுல்லார். ஸ்ரீதேஜா குணமடைந்து வருவதை காண எங்கள் மொத்த குடும்பமும் காத்திருக்கிறது.
நாளுக்கு நாள் ஸ்ரீதேஜா குணமடைந்து வருகிறார். சிகிச்சைக்காக அல்லு அர்ஜுன் மற்றும் புஷ்பா 2 தயாரிப்பாளர் இருவரும் இரண்டு கோடி ரூபாயை கொடுத்திருக்கின்றனர்.
ஸ்ரீதேஜா மற்றவர்களை நினைவு கூறும் அளவிற்கு முழுமையாக இன்னும் குணம் அடையவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.