மருத்துவமனை மற்றும் நகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சிதம்பரத்தில் மருத்துவமனை மற்றும் நகராட்சி நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் பரமசிவம் பங்கேற்பு
கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க சிதம்பரத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தது. கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிதம்பரம் அரசு காமராஜர் பொது மருத்துவமனை மற்றும் சிதம்பரம் நகராட்சி ஆகியவற்றில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்தும், அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணியை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டு வைத்துள்ள திமுக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சிதம்பரம் தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ. பாண்டியன் முன்னிலை வகித்தார். இதில் அதிமுகவின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் பரமசிவம் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஏராளமான அதிமுகவினர் திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.