in

ஏ…தள்ளு… தள்ளு… தள்ளு…. நடுரோட்டில் பழுதான நாகை வட்டாட்சியர் வாகனம்

ஏ…தள்ளு… தள்ளு… தள்ளு…. நடுரோட்டில் பழுதான நாகை வட்டாட்சியர் வாகனம்

 

ஏ…தள்ளு… தள்ளு… தள்ளு…. நடுரோட்டில் பழுதான நாகை வட்டாட்சியர் வாகனம் ; சக ஊழியர்கள் கீழே இறங்கி ஸ்டார்ட் செய்து அலுவலகத்திற்கு சென்றார்.

நாகை வட்டாட்சியர் நீலாயதாட்சி திருமருகல் ஒன்றியத்தில் ஆலமரத்தடி, கேதாரி மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இடம் பிரச்சனை தொடர்பாக நேரில் ஆய்வு செய்தார்.

நாகையில் இருந்து அரசுக்கு சொந்தமான ஜீப்பில் சக அதிகாரிகளுடன் வந்த வட்டாட்சியர் ஆய்வு பணிகளை முடித்துக்கொண்டு நாகை திரும்பியபோது புத்தகரம் பகுதியில் திடீரென வாகனம் பழுதானது.

அதனை தொடர்ந்து வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கீழே இறங்கியதை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர்கள், ஆர்.ஐ, அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்டோர் வாகனத்தை தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்ய உதவினர்.

அதனை தொடர்ந்து நாகை வட்டாட்சியர் உள்ளிட்டோர் அதிகாரிகள் வாகனத்தில் ஏறி நாகை சென்றனர். பல ஆண்டுகளாக நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு மாவட்ட அதிகாரிகளின் வாகனங்கள் பழுதடைந்து இதே நிலைமையில் இருப்பதாகவும் அதனை மாற்றி புதிய வாகனம் வழங்க வேண்டும் என்றும் சக அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.

What do you think?

மஞ்சு வாரியரின் உயிரை ‘காப்பாற்றிய’ மனோஜ் கே ஜெயன்

ரீமேக் படங்கள் தான் ஆட்சி செய்ய நிதி கொடுகிறது… பவன் கல்யாண் பல்டி