in

ட்ரோல் பயம்? கமல் எடுத்த அதிரடி முடிவு! 50,000 ரூபாய் கட்டணம் வாபஸ்! தேர்தலை விட்டு விலகிய கமல்!

Watch – YouTube Click

தமிழக அரசியல் களம் இப்போ தேர்தலை நோக்கி அனல் பறந்துட்டு இருக்கு! இதுல நம்ம நம்ம ‘ஆண்டவர்’ கமல்ஹாசனோட ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சி எடுத்த ஒரு முடிவு இப்போ சோஷியல் மீடியாவுல பயங்கர விவாதத்தை கிளப்பிருக்கு.

திமுக கூட்டணியில இருக்குற கமல், இந்த தேர்தல்ல அவரோட கட்சி போட்டியிடாதுன்னு திடீர்னு அறிவிச்சது எல்லாருக்கும் பெரிய ஷாக்!

“திமுக கொடுத்த தொகுதிகள் ரொம்ப கம்மி, அதான் இந்த முடிவு”ன்னு அவரு விளக்கம் கொடுத்தாலும், கட்சிக்குள்ளயே இது பெரிய புகைச்சலை கிளப்பிருச்சு.

தேர்தல்ல போட்டியிடலாம்னு ஆசையா 60-க்கும் மேற்பட்டவங்க, ஆளுக்கு 50,000 ரூபாய் கட்டி விருப்ப மனு குடுத்திருந்தாங்க.

ஆனா, “கட்சியே போட்டியிடாது”ன்னு சொன்னதும், “நாங்க கட்டுன காசு என்னாச்சு?”ன்னு அந்த நிர்வாகிகள் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.

முதல்ல கமல் என்ன சொன்னாருன்னா, “அந்தக் காசு கட்சி நிதியில சேர்ந்துடுச்சு, அதனால திருப்பித் தர முடியாது”ன்னு ஒரு போடு போட்டாரு. அவ்ளோதான்..

சோஷியல் மீடியாவுல நம்ம நெட்டிசன்கள் சும்மா விடுவாங்களா? “போட்டியே இல்லைன்னா எதுக்கு காசு வாங்கணும்?

“னு அடுக்கடுக்கா ட்ரோல் பண்ணி அசிங்கப்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க.ட்ரோல்களும், விமர்சனங்களும் தாறுமாறா எகிறினதால, வேற வழி இல்லாம கமல் இப்போ ஒரு புது அறிவிப்பை வெளியிட்டிருக்காரு.

“விருப்ப மனுவுக்காக காசு கட்டுனவங்க, விருப்பம் இருந்தா அந்தப் பணத்தை திரும்ப வாங்கிக்கலாம்”னு சொல்லிட்டாரு.

அரசியல்ல வர்ற அழுத்தங்களும், சோஷியல் மீடியா ட்ரோல்களும் எப்படி ஒரு பெரிய தலைவரையே முடிவை மாத்த வைக்குதுங்கிறதுக்கு இது ஒரு பெரிய உதாரணம்!

அசிங்கப்பட்ட பிறகு இந்த முடிவை எடுத்தது சரியா? இல்ல இது ஒரு நல்ல நகர்வா? நீங்க என்ன நினைக்கிறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க! முழு விவரங்களுக்கு வீடியோவைப் பாருங்க!

What do you think?

புதுச்சேரி மண்ணாடிபட்டு தொகுதியில் காங்கிரஸ் – பாஜனதா வேட்பாளர்கள் நேருக்கு நேர் மோதுகின்றனர்.

புதுச்சேரியில் ஒரு மாற்றத்தை நோக்கி நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் திரண்டு வாக்களித்து வருவதாகவும், நிச்சயமாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சியமைக்கும் என சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா. சிவா தெரிவித்துள்ளார்.