மல்லிகைப்பூவிற்கு அபராதம் கட்டிய நடிகை
தென்னிந்தியாவில் தலையில் பூக்கள் சூடுவது பொதுவான வழக்கம் இருப்பினும், ஆஸ்திரேலியாவிற்க்குள் மல்லிகைப்பூ கொண்டு செல்ல தடை.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதற்காக மலையாள நடிகை நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
விக்டோரியா மலையாளி சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஓணம் கொண்டாட்டங்களில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் நவ்யா தடுத்து நிறுத்தப்பட்டார். 15 செ.மீ நீளமுள்ள மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதற்காக அவருக்கு ரூ.1.14 .லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது.
“நான் இங்கு வருவதற்கு முன்பு, என் தந்தைதான் எனக்காக மல்லிகைப்பூவை வாங்கி வந்தார். அவர் அதை இரண்டு பகுதிகளாக வெட்டி என்னிடம் கொடுத்தார்.
நான் கொச்சியிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்வதற்குள் அது வாடிவிடும் என்பதால், என் தலையில் வைத்து கொள்ள சொன்னார். இரண்டாவது துண்டை என் கைப்பையில் வைத்திருக்கச் சொன்னார். நான் அதை என் Hand Bag…கில் வைத்தேன்,” “நான் செய்தது சட்டத்திற்கு எதிரானது. நான் அறியாமல் செய்த தவறு. இருப்பினும், 15 செ.மீ மல்லிகைச் சரத்தை கொண்டு வந்ததற்கு, அதிகாரிகள் என்னிடம் (ரூ. 1.14 லட்சம்) அபராதத்தை 28 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று சொன்னார்கள்,” என்று வருத்ததுடன் கூறினார்.


