மேக்கிங் வீடியோவை வெளியிட்டுட்ட நடிகர் விஷால்
“தமிழ் சினிமாவுல இருக்குற நம்ம முன்னணி நடிகர் விஷால் இப்போ ‘மகுடம்’னு ஒரு படத்துல நடிச்சிக்கிட்டு இருக்காரு.
அந்தப் படத்துல அவருக்கு ஜோடியா துஷாரா விஜயன் நடிக்கிறாங்க.
அதுமட்டுமில்லாம, நடிகை அஞ்சலியும் ஒரு முக்கியமான ரோல்ல வர்றாங்க.
இந்த அப்டேட்ட விஷால் சாரே தீபாவளி அன்னிக்கு அதிகாரப்பூர்வமா அறிவிச்சாரு.
இப்போ படத்தோட ஷூட்டிங் கிட்டத்தட்ட முடியுற ஸ்டேஜ்க்கு வந்துருச்சாம். சமீபத்துல அந்தப் படத்துக்கான கிளைமேக்ஸ் சீன்ஸை எடுத்திருக்காங்க.
கிட்டத்தட்ட தொடர்ந்து 17 ராத்திரிகள் இந்தப் படத்துக்கான கிளைமேக்ஸ் ஷூட்டிங் நடந்திருக்குன்னா பாருங்களேன்!
இந்த நிலையில, விஷால் சார் என்ன பண்ணிருக்காருன்னா, ‘மகுடம்’ படத்தோட கிளைமேக்ஸ் காட்சி எப்படி ஷூட் பண்ணாங்கன்ற மேக்கிங் வீடியோவை இப்போ வெளியிட்டுட்டாரு!”.


