விஜயகாந்த்து இடத்தை நிரப்பகூடியவர் நடிகர் விமல் தான்
கடந்த 2013 ஆம் ஆண்டு தேசிங்குராஜா என்ற படம் வெளியாகி வெற்றி பெற்றது. அப்படத்தின் இரண்டாம் பாகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உருவாகி வருகிறது.
பூஜிதா பொன்னாடா, ஹர்ஷிதா, சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா, R.V.உதயகுமார், சிங்கம்புலி, நாஞ்சில் அன்பழகன் உள்ளிட்ட காமெடி நடிகர் பட்டாலம் மற்றும் முன்னணி டைரக்டர்கள் பலரும் நடித்துள்ளனர்.
ஜூலை 11…ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு விழாவில் இயக்குனர் R.V.உதயகுமார் பேசுகையில் விமலை பற்றி யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் என்னை பொருத்தவரை அவர் நல்ல மனிதர் எப்போது ஃபோன் போட்டாலும் உடனே எடுத்து நிதானமாக பேசக் கூடியவர்.
இன்னும் சொல்லப்போனால் விஜயகாந்த்துக்கு அடுத்து வெள்ளந்தியாக அனைவரையும் பேச்சால் ஈர்க்கக்கூடிய தன்மையாளர் விமல்.
ஹீரோ என்ற பந்தா அவரிடம் இருக்கவே இருக்காது எல்லோரையும் அரவணைத்து போகக்கூடிய மனப்பக்குவம் கொண்ட விமலுக்கு தோல்வி என்பது கிடையாது இனிவரும் காலம் அவருக்கு பொற்காலமே என்று நடிகர் விமலை’ புகழ்ந்து தள்ளியுள்ளார்.