அஜித் குமாரின் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் புதன்கிழமை (ஜூலை 2, 2025) திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள என். அஜித் குமாரின் வீட்டிற்குச் சென்றார்..
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கோவிலில் காவலராக வேலை செய்த அஜித்குமார் என்பவர் கோவிலில் நகை மாயமானது தொடர்பாக அவரை கைது செய்து போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் TVK கட்சி தலைவர் நடிகர் விஜய் நேரில் சென்று அந்த குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.
அஜித்குமாரின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பிறகு, பாதிக்கப்பட்டவரின் சகோதரர் என். நவீன் குமார் மற்றும் தாயார் பி. மாலத் ஆகியோரிடம் பேசினார்.
மேலும் அவர் குடும்பத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் நிதியுதவியும் வழங்கினார். நடிகர் விஜய் திடீரென்று அங்கு வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது ரசிகர்களும் தொண்டர்களும் அவரை சூழ்ந்து கொண்டனர். சிறுது நேரத்தில் அங்கிருந்து விடை பெற்று சென்றார்.


