லோகேஷ்..உடன் கைகோர்க்கும் நடிகர் சூரி
தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெற்றிகரமான முன்னணி நடிகராக மாறி வரும் நடிகர் சூரி, புதிய படத்திற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் சூரி தற்போது மண்டாடி என்ற படத்தில் நடிதுகொண்டிருகிறார்.
நடிகர் சூரி..யின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது, பிரபல மலையாள திரைப்பட தயாரிப்பாளர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்குகிறார்.
அங்கமாலி டைரீஸ் மற்றும் ஜல்லிக்கட்டு போன்ற படங்கலை இயக்கியவர். சூரியின் திறமையை பாராட்டிய லோகேஷ், “நான் கேள்விப்பட்ட 10 கதைகளில் 5 கதைகள் சூரிக்காக எழுதப்பட்டவை” என்று கூறியுள்ளார்.
லோகேஷ் மற்றும் சூரி இணைந்து பணியாற்றுவது இதுவே முதல் முறை.