கடலூர் கோவிலில் தீ மிதித்த நடிகர் புகழ்
நடிகர் புகழ் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் காமெடியனாக அறிமுகமானவர்.
தற்பொழுது விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று இருக்கிறார்.
நடிகர் புகழ் கடலூர் கோவில் ஒன்றில் தீ மிதிக்கும் திருவிழாவில் பங்கேற்று தீ மிதித்த வீடியோ..வை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ஆண்டவா எல்லோரும் எப்பவும் மன நிம்மதியோடு எந்த தொந்தரவும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கணும் என்று பதிவிட்டுள்ளார்.
நம்ப கடலூருக்கு வருகை தந்து கோயில் திருவிழாவினை சிறப்பித்ததற்கு மிக்க நன்றி என்று ரசிகர்கள் கமென்ட் செய்திருகின்றனர்.


