in

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் நம்மாழ்வார் அவதார வைகாசி திருவிழா கொடியேற்றம்

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் நம்மாழ்வார் அவதார வைகாசி திருவிழா கொடியேற்றம்

 

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் நம்மாழ்வார் அவதார வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவதிருப்பதிகளில் 9ம் திருப்பதியும் குருவுக்கு அதிபதியுமாக ஆழ்வார்திருநகரி ஆதிநாதா் ஆழ்வார் திருக்கோவில் அமைந்துள்ளது.

இந்த திருத்தலத்தில் மூலவா் ஆதிநாதா் நின்ற திருக்கோலத்திலும் தாயார்கள் ஆதிநாயகி, குருகூா்வல்லி ஆகியோரும் அருள்பாளிக்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருத்தலத்தில் சுவாமி நம்மாழ்வார் வைகாசி விசாகம் அன்று திருஅவதாரம் செய்தார்.

ஆண்டுக்கு நான்கு திருவிழாக்கள் இத்திரு ஸ்தலத்தில் நடைபெறும். மாசி மாதமும் வைகாசி மாதமும் சுவாமி நம்மாழ்வார்க்கும், பங்குனி மாதமும் சித்திரை மாதமும் ஆதிநாதருக்கும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி நம்மாழ்வார் அவதாரம் செய்ததை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா 10 தினங்கள் நடைபெறுகின்றது. அதேபோல் இந்த ஆண்டும் நம்மாழ்வாருக்கு வைகாசி திருவிழா இன்று மே 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம், நித்தியல், கோஷ்டி நடைபெற்றது.

பின்னர் கொடிப் பட்டம் மாட வீதிகளில் வலம் வந்து பூஜைகள் செய்து நம்மாழ்வார் பிரகாரம் முன்புள்ள கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழா காலங்களில் காலையில் மாலையில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும்.

வருகின்ற ஜூன் 4 ஆம் தேதி காலை நம்மாழ்வார் நவ திருப்பதி கோயில்களில் உள்ள ஒன்பது பெருமாள்களுக்கும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் முன்பு மங்களாசாசனம் செய்யும் நிகழ்வு நடைபெறும்.

தொடர்ந்து இரவு நவதிருப்பதி கோவில்களில் உள்ள ஒன்பது பெருமாள்களும் கருட வாகனத்தில் ஒரே இடத்தில் காட்சி கொடுக்கும் கருட சேவை நடைபெறுகிறது. ஜூன் 8 ஆம் தேதி சிகர நிகழ்ச்சியான 9 ஆம் திருவிழாவை முன்னிட்டு தேர்திருவிழா நடைபெறுகிறது. ஜூன் 9 ஆம் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

What do you think?

நடிகர் விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா அறிமுகமாகும் ‘ஓஹோ எந்தன் பேபி’

முன்னாள் முதல்வர் கலைஞரின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மரியாதை