முதலீட்டு போலி செயலிகளை நீக்க நடவடிக்கை ..செபி தலைவர் உறுதி..
முதலீட்டு போலி செயலிகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) தலைவர் துஹின் காந்தா பாண்டே கூறினார்.
தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) மற்றும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்தனை வாரியம் (செபி)ஆகியவை இணைந்து பிராந்திய முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தின.
இக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய செபி தலைவர் துஹின் காந்தா பாண்டே, வங்கியில் முதலீடு செய்வது என்பது வழக்கமான ஒன்று. பங்கு சந்தையில் முதலீடு செய்வது என்பது அதிக வருவாய்க் கொடுக்கும் முதலீடு. எந்தெந்த கம்பெனிகளில் முதலீடு செய்கிறோம் என்பதை உணர்ந்து முதலீட்டாளர்கள் முதலீடு செய்கிறார்கள்.
அந்த முதலீடுகளைக் குறிப்பிட்ட கம்பெனியின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. குறைந்த இடர்பாடு போதும் என்பவர்கள் வங்கியில் முதலீடு செய்கிறார்கள். அதிகமான இடர்பாடு இருந்தாலும் அதிக வருவாய்க் கிடைத்தால் பரவாயில்லை என்பவர்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்கிறார்கள்.
அவரவர் குடும்பச் சூழல், சூழ்நிலையைப் பொறுத்த முடிவு செய்ய வேண்டும். எந்த முதலீடு செய்தாலும் ஒரே இடத்தில் முதலீடு செய்யாமல் பல்வேறு நிலைகளிலும் முதலீடு இருப்பது நல்லது.
அதிகம் இப்போது தகவல் தொழில்நுட்பத்தை செபி பயன்படுத்தத் தொடங்கி விட்டது. விரைவில் போலி முதலீட்டு செயலிகள் அனைத்தும் நீக்கப்படும் என்றார் செபி தலைவர்.
கூட்டத்தில் என்எஸ்இ நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆஷிஷ்குமார் செüகான், புதுச்சேரி காவல்துறை இணையவழி குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் ஸ்ருதி யாரகட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..


