அதிரடி ஆக்ஷன் நிறைந்த மேக்கிங் வீடியோ.. வெளியிட்டா Jason சஞ்சய்
தளபதி விஜய் சினிமாவை விட்டு விலகும் நிலையில் அவரது மகன் Jason சஞ்சய் இயக்குனராக Entry கொடுத்திருகிறார்.
ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இன்று வெளியிடப்பட்ட ஒரு நிமிட பரபரப்பான மேக்கிங் வீடியோ சமூக ஊடகங்களில் viral..ஆகி வருகிறது.
சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை Lycaa தயாரிகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமான மாநகரம் படத்திலும் சந்தீப் கிஷன் ஹீரோ…வாக நடித்திருக்கிறார்.
இதுவரை Silent…டாக 31 படத்தில் சந்தீப் கதாநாயகனாக நடித்திருக்கிறார். ஜேசன் சஞ்சய் இயக்குநராக எடுக்கும் முதல் படம் மோஷன் போஸ்டருடன் கூடிய ஆரம்ப அறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டது, தற்போது, சந்தீப் கிஷனின் பிறந்தநாளைக் முன்னிட்டு, படத்தின் பின்னணி காட்சிகள் அடங்கிய சிறப்பு வீடியோவை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்த காட்சிகளில் ஜேசன் சஞ்சய், நடிகர் சந்தீப் உள்ளடக்கிய அதிரடி காட்சிகள் உட்பட முக்கிய காட்சிகளை ஆர்வத்துடன் இயக்குவது காட்டப்பட்டுள்ளது, இது ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்காக. இசையமைகிறார் தமன். படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேசன் சஞ்சய்யின் அறிமுகத்திற்கான எதிர்பார்ப்பை இந்த மேக்கிங் வீடியோ இன்னும் அதிகரித்துள்ளது.