ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோயிலில் விஷ்ணுபதி புண்யகால அபிஷேக ஆராதனை
திண்டிவனத்தில் அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீ விஷ்ணுபதி புண்யகால அபிஷேக ஆராதனையில் சுவாமியை தரிசனம் செய்த பக்தர்களும், பொதுமக்களும் கொட்டு மழையிலும் கோயிலை சுற்றி வலம் வந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருள்மிகு ஸ்ரீ கனகவள்ளி தாயார் சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீ விஷ்ணுபதி புண்யகால அபிஷேகம் ஆராதனை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

சுவாமியை தரிசனம் செய்த பக்தர்களும், பொதுமக்களும் கொட்டும் மழையிலும் கலந்து கொண்டு கோயிலை சுற்றி வலம் வந்தனர்.


