நாமக்கல் ராசிபுரம் அடுத்த தென்திரு அண்ணாமலையார் ஆலயத்தில் மார்கழி தேய்பிறை பஞ்சமி சப்த மாதர்களுக்கு அபிஷேக ஆராதனை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அண்ணாமலை பட்டியில் உள்ள தென் திருஅண்ணாமலை அருள்தரும் உண்ணாமுலை அம்மை உடனாகிய அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில்மார்கழி மாத தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு.
நேற்று இரவு இங்குள்ள சப்த மாதர்களாக அருந்தரும்
பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைசுணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி
சப்த மாதர்களுக்குபஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் மஞ்சள் சந்தனம் குங்குமம் என பலவித வாசனை திரவியம் கொண்டு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு.
வண்ண வாசனை நறுமலர்கள் கொண்டு அர்ச்சனை செய்த பின்தேங்காய் தீபம் ஏற்றப்பட்டு, பஞ்சதீபம் உட்பட மகா தீபம் காண்பிக்கப்பட்டது இதில் இப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் வழிபாடு செய்தனர் பின்னர் வருகை புரிந்த பக்தர்களுக்கு கோவில் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டது.


