in

செஞ்சி அருணாச்சலேஸ்வர கோவில் ஆனித் திருமஞ்சன விழா

செஞ்சி அருணாச்சலேஸ்வர கோவில் ஆனித் திருமஞ்சன விழா

 

செஞ்சி பீரங்கி மேடு அருணாச்சலேஸ்வர கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட பீரங்கிமேடு பகுதியில் அமைந்துள்ள 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான திருத்தலமான அருள்மிகு அபீதகுஜாம்பாள் சமேத அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற ஆனி திருமஞ்சன விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீசிவகாமிசுந்தரி உடனுறை ஸ்ரீநடராஜர் பெருமானுக்கு ஆனித் திருமஞ்சன விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. ஆனி திருமஞ்சன திரு நாளை முன்னிட்டு அதிகாலை 4 – மணிக்கு ஸ்ரீசிவகாமி சுந்தரி உடனுறை நடராஜருக்கு பால், தயிர், பன்னீர், தேன், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை நடைபெற்றது.

இதை முன்னிட்டு மூலவர் அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதை தொடர்ந்து நடராஜருக்கு பலவித மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து மேள தாளங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ சிவகாமிசுந்தரி நடராஜர் சுவாமி, மாணிக்கவாசகர் உடன் வீதி உலா காட்சி நடைபெற்றது. சுவாமி வீதி உலாவின் போது ஒரே சீருடை அணிந்த பெண் பக்தர்களின் கோலாட்டம், கும்மி ஆட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் செஞ்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்குக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் கோவில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. வீதி உலா நிகழ்ச்சி முடிந்து சுவாமி திருக்கோவிலுக்கு வந்தடைந்ததும், சிவன் பாடல்களுக்கு பெண் பக்தர்களின் கோலாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. கலந்து கொண்ட பக்தர்கள் நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்தனர்.

What do you think?

மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் 2ஆம் முறையில் இருந்து 3ஆம் முறைக்கு மாற்றம்

விஜயகாந்த்து இடத்தை நிரப்பகூடியவர் நடிகர் விமல் தான்