சிவகர்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்
அமீர்கான் நடிப்பில் வெளியான சித்தாரே ஜமீன் பர் படம் கடந்த மாதம் வெளியாகி 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
மனநலம் பாதிக்க பட்டவர்களுக்கு பாஸ்கட் Ball பயிற்சி கொடுக்கும் கோச்..சாக அமீர்கான் நடித்துள்ளார்.
கல்யாண சமையல் சாதம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆர்.எஸ். பிரசன்னா இயக்கியுள்ளார்.
இப்படத்தில் முதலில் சிவகார்த்திகேயன் கமிட் ஆனார் ஆனால் அதன் பிறகு அமீர்கானே நடித்துவிட்டார்.
அவருக்கு ஜோடி நடிகை ஜெனிலியா நடித்திருக்கிறார். தான் ஏன் அந்த படத்தில் நடித்தேன் என்று அமீர்கான் விளக்கம் தந்துள்ளார்.
லால் சிங் சத்தா தோல்விக்கு பிறகு நடிப்பிற்கு பிரேக் கொடுக்க நினைத்தேன். தயாரிப்பில் ஈடுபடலாம் என முடிவு செய்து சித்தாரே ஜமீன் பர் படத்தின் கதையை தமிழில் சிவகார்த்திகேயன் இடமும் ஹிந்தியில் பர்கான் அக்பர்…. யிடமும் சொல்லப்பட்டது இருவருக்குமே கதை பிடித்துக் விட்டது .
ஒரு கட்டத்தில் படத்தின் கதை எனக்கு பிடித்து போக நான் இயக்குனர் பிரசன்னாவிடம் நானே நடிக்கிறேன் என்றுகூறினேன். அவரும் சரி என்றார் அதன் பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் பர்கான் இருவரிடமும் மன்னிப்பு கேட்டேன்.
இருவருக்கும் ஏமாற்றம் தந்தாலும் சூழ்நிலையை புரிந்து கொண்டார்கள்.