காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டார்
கும்பகோணத்தில் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டார் ஆற்றில் தேடும் பணி தீவிரம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மூப்பகோயில் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜேஷ் வயது 25. இவர் அப்பகுதியில் உள்ள அரிசி ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் ராஜேஷ் இன்று மதியம் ஏகாரம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது தண்ணீரின் வேகம் காரணமாக ராஜேஷ் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் கும்பகோணம் கிழக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய ராஜேஷை தேடி வருகின்றனர்.


