14 சவரன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் திருட்டு, வீட்டு வேலை செய்த வடமாநில பெண் கைது.
பீரோவில் இருந்து 14 சவரன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் திருட்டு, வீட்டில் வேலை செய்த வடமாநில பெண் கைது.
நொளம்பூர் பகுதியில் 14 சவரன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் திருடிய வீட்டு பணிப்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை நொளம்பூர், அண்ணாமலை அவென்யூ பகுதியில் வசித்து வரும் ரங்கராஜ் (65) என்பவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது வீட்டில் ரிங்குமுகர்ஜி என்ற பெண் கடந்த 2025 ஜூன் மாதம் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படவே 15 நாட்களுக்கு பின்னர் ரங்கராஜ் வீட்டின் பீரோவில் வைத்திருந்த தங்க நகைகளை சரி பார்த்துள்ளார். அப்போது 14 சவரன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணம் 50 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது.
இது குறித்து ரங்கராஜ், V-7 நொளம்பூர் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ரங்கராஜன் வீட்டில் வேலை செய்து வந்த ரிங்குமுகர்ஜி என்ற பெண் மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதை கண்டறிந்தனர்.
இதையடுத்து மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ரிங்குமுகர்ஜி (23) என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 14 சவரன் தங்க நகைகள் மற்றும் பத்தாயிரம் ரூபாய் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


