திருவாடானை கோவில் முன்பு சீர் ஏற்றி வந்த வேனை நடுரோட்டில் நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படட்டு
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அருள்மிகு சினேகவல்லி உடனமர் அருள்மிகு ஆதி ரெத்தினஸ்வரர் சிவன் ஆலயம் உள்ளது. இன்று முகூர்த்த நாளை முன்னிட்டு சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது.

மேலும் சீர் ஏற்றி வந்த வேன் ஒன்றை நடு ரோட்டிலேயே நிறுத்தி சென்றதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். முகூர்த்த நாட்களில் உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத் நெரிசல் இல்லாமல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
