in

மடப்புரம் கோவில் காவலாளி வழக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான மருத்துவர் குழு மற்றும் கோவில் பணியாளர்

மடப்புரம் கோவில் காவலாளி வழக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான மருத்துவர் குழு மற்றும் கோவில் பணியாளர்

 

மடப்புரம் கோவில் காவலாளி வழக்கு- பத்தாவது நாளாக நடைபெற்று வரும் விசாரணை சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான மருத்துவர் குழு மற்றும் கோவில் பணியாளர்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளியம்மன் கோவில் பணியாளர் அஜித்குமார் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் , வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து

சிபிஐ அதிகாரிகள் திருப்புவனம் மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இறந்த அஜித் குமாரின் தம்பி மற்றும் வீடியோ பதிவு செய்த நபர் உள்ளிட்டோர்கள் நேற்றைய தினம் ஆத்திகுளம் பகுதியில் இருக்கக்கூடிய சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்காக ஆஜராகிய நிலையில்

தற்போது மதுரை ஆத்திகுளம் பகுதியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு கோவில் ஊழியர்கள் கண்ணன் கார்த்திக் இருவரும் வருகை தந்த நிலையில்
திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன், செவிலியர் சாந்தி, உதவியாளர் அழகர் ஆகியோர் மதுரை சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருகை புரிந்துள்ளனர்.

What do you think?

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிமை முன்னால் அமைச்சர் செஞ்சி மஸ்தான்

கைகளைக் கட்டிய நிலையில் தொங்கிய ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளி