in

நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா

நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா

 

நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா- நள்ளிரவில் நடைபெற்ற உருண்டை சோறுடன் கூடிய கிடாக்கறி விருந்து. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட கறி விருந்து.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பாத சிறுகுடியில் பொன்னர் சங்கர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் உருண்டைச் சோறுடன் கூடிய கறி விருந்து திருவிழா நடைபெறுவது வழக்கம். இக்கோவிலில் பல நூறு ஆண்டுகளாக இத்திருவிழா பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு இவ்விழா நள்ளிரவு தொடங்கிய திருவிழாவில் ஏராளமான ஆண் பக்தர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 101 ஆடுகளை சாமிக்கு பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.

பின்னர் இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆடுகளை உரித்து சுத்தம் செய்து பின்னர் சமைத்தனர். சமையல் அனைத்தும் செய்த பின்னர் பூஜைகள் செய்யப்பட்டு பொன்னர் சங்கர் சாமிக்கு படைக்கப்பட்ட உருண்டை சாதத்தை மின் விளக்கை அணைத்த பின்னர் வானை நோக்கி எரிந்து பின்னர் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு விருந்தாக பரிமாறப்பட்டது.

இந்த வினோத விழாவில் சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை பெண்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை.

நள்ளிரவில் நடைபெற்ற இந்த வினோத திருவிழாவில் இதில் பாத சிறுகுடி, குமரபட்டி, புதூர், நத்தம்,குட்டூர் மாம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்றனர்.

What do you think?

திருச்செந்தூர் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா

ஆகாய தாமரையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்