in

விவசாயம் செழிக்க வேண்டி 30 குண்டங்களில் சிறப்பு மகா பூஜை

விவசாயம் செழிக்க வேண்டி 30 குண்டங்களில் சிறப்பு மகா பூஜை

 

சீர்காழி அருகே ஆலஞ்சேரி கிராமத்தில் அகத்தீஸ்வரர் சிவாயலத்தில் விவசாயம் செழிக்க வேண்டி 30 குண்டங்களில் சிறப்பு மகா பூஜை கிராம மக்கள் வழிபாடு!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆலஞ்சேரி கிராமத்தில் பழைமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் கடைமடையான டெல்டா பகுதியில் இயற்கை இடர்பாடுகளால் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள கிராமப்புற மக்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனை போக்கும் விதமாக கிராம மக்கள் ஒன்றிணைந்து ஆலஞ்சரி கிராமத்தில் உள்ள அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் 30 குண்டங்கள் அமைக்கப்பட்டு விவசாயம் பாதிப்பில்லாமல் செழிக்க வேண்டி சிறப்பு பூஜைகள் செய்து அகஸ்தீஸ்வரருக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான கிராம மக்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை நாடி செல்வம் முத்துக்குமரன், நாடி மாமல்லன் ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.

What do you think?

வடலூரில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 ‘ஆனந்தா’ ஆன்மீக பட விழா.. துர்கா ஸ்டாலின் பங்கேற்பு