மின் கசிவு ஏற்பட்டு குடிசை வீடு மற்றும் இரண்டு இரு சக்கர வாகனம் தீயில் எரிந்து சாம்பல்
கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூரில் மின் கசிவு ஏற்பட்டு குடிசை வீடு மற்றும் இரண்டு இரு சக்கர வாகனம் தீயில் எரிந்து சாம்பலாகின.
கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூர் ஊராட்சியில் கீழத்தெருவில் வசிக்கும் மகாலிங்கம் மகன் சுந்தரமூர்த்தி விவசாயம் செய்து வருகிறார்.
இவர் நேற்று இரவு கும்பகோணம் சென்று வீட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து நிறுத்திவிட்டு உள்ளே சென்றபோது வீட்டின் மேலே சென்ற ஒயர் கீற்று கொட்டாய் மீது தீப்பொறி பட்டு மல மலமொன தீப்பிடித்து எரிந்தது.
இதில் வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. தகவலயறிந்த தீயணைப்பு துறையினர் மேலும் தீ பரவாமல் தீயை அணைத்தனர்.
இதுகுறித்து தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.


