நாமக்கல் அருகே சனிப்பெயர்ச்சி முன்னிட்டு ஸ்ரீ சனீஸ்வரனுக்கு பால்குட ஊர்வலம் அபிஷேக ஆராதனைகள்
நாமக்கல் அருகே உள்ள இராசாம்பாளையம் கிராமம் அறியாத ஊற்று செம்மலையில் உள்ள ஸ்ரீ சனீஸ்வரன் சிறப்பு வழிபாட்டு ஸ்தலத்தில் இன்று சனி பகவான் காலை 8.24 மணிக்கு கும்ப இராசியிலிருந்து மீன இராசிக்கு சனி பெயர்சி அடைந்தார்.
அதனை முன்னிட்டு இன்று காலை கருப்பண்ண சுவாமி ஆலயத்திலிருந்து பால், தீர்த்த குட ஊர்வலம் துவங்கி பின் கோவில் வளாகத்தில் மஹா கணபதி பூஜை கணபதி ஹோமம், ஸ்ரீ சனீஸ்வரர் சகஸ்ரநாமம், ஸ்ரீ சனிஸ்வரர் காயத்திரி ஹோமம், ஸ்ரீ சனீஸ்வரர் மூலமந்து ஹோமம், நவக்கிரஹ ஹோமம், பூர்ணாகதி பின்னர்சனீஸ்வரனுக்கு தைலகாப்பு பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் விபூதி கலசம்கொண்டு .

அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சனி பகவனுக்கு 108 நாமவளி வண்ண நறுமலர்கள் கொண்டு அர்ச்சனையும் பின்னர் மஹா தீபம் காண்பிக்கப்பட்டன.
அப்போது பக்தர்கள் தங்கள் இராசிக்கு சிறப்பு அர்ச்சனை செய்து கொண்டு எள்தீபம் ஏற்ற வழிபாடு செய்தனர்.
பின்னர் சிறிய பல்லாக்கில் பக்தர்களுக்கு சனி பகவான் திருக்கோயில் சுற்றி வந்து காட்சியளித்து பின்னர். யாகம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்வை பிரம்ம ஸ்ரீ வி.பி. கோபி சிவாச்சியர் குழவினர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்த சனீஸ்வரன் சிறப்பு வழிபாட்டு ஸ்தலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமை அன்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வருகின்றன. வருகை புரிந்த அனைவருக்கும் அன்னதானம் கோவில் சார்பாக வழங்கப்பட்டது


