100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகளில் திமுக அரசு ஈடுபடுவதை தடுக்கவே தற்போது புதிய முறை கொண்டுவரப்பட்டு உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக ஸ்டாலின் அரசை கண்டித்து திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட
அதிமுகவின் சார்பில் அதிமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பாக நடைபெற்றது.
அதிமுக, பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் அமைச்சர் எஸ். ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 125 நாள் வேலை உறுதி திட்டத்தில் பொய் பிரச்சாரங்களை பரப்பி வரும் திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி அதிமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அதிமுக ஆட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பயனாளிகளுக்கு முறையாக கூலி வழங்கப்பட்டதாகவும், தற்போதைய திமுக அரசு இந்த திட்டத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு பொதுமக்கள் இதில் பங்கேற்க முடியாத சூழ்நிலை உள்ளதாகவும், மேலும் பல்வேறு முறைகேடுகளில் இந்த திட்டத்தில் திமுக அரசு ஈடுபட்டு வருவதால் தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள 125 நாள் வேலை திட்டத்தில் எந்த ஒரு முறைகேடு செய்ய முடியாது.
என்பதனால் தான் திமுக அரசு இதனை எதிர்ப்பதாகவும் இது குறித்து பொய்யான பிரச்சாரங்களை திமுக அரசு மேற்கொண்டு வருவதாகவும் முன்னால் அமைச்சர் எஸ், ராமச்சந்திரன் குற்றம் சாட்டினார்.
மேலும் 2026ல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக அரசு அமைந்த உடன் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை 150 நாளாக முயற்சி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என முன்னாள் அமைச்சர் எஸ். ராமச்சந்திரன் உரையாற்றினார்.


