பாகுபாடு இன்றி இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் விவசாய தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கடலூர் மாவட்டம் நெய்வேலி மந்தாரகுப்பம் சுரங்கம் 2 நுழைவாயில் எதிரே விவசாயிகள் விவசாய தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
என்எல்சி இந்தியா நிறுவனம் சுரங்கம் 2 விரிவாக்க பணிக்காக கம்மாபுரம் ,சாத்தப்பாடி, கோபாலபுரம், ஊஆதனூர் வளயமாதேவி,
மதுவானமேடு, முத்துகிருஷ்னாபுரம் ,இந்திர நகர் மாற்று குடியிருப்பு கோட்டகம் ,கெளக்குடி கங்கைகொண்டான் ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்கள் மற்றும் வீட்டுமனைகளை கையகப்படுத்தியது
கடந்த 2006 முதல் 2009 வரை வீடு நிலம் மனை மற்றும் விவசாய நிலங்களை கையகப்படுத்திய என்எல்சி நிர்வாகம் ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே நிவாரணத்தை முழுமையாக வழங்கி உள்ளது.
எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாகுபாடு இன்றி நிவாரணத்தை உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் விவசாய தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது வாய்க்கால் மண்மேடு என வகைப்படுத்தாமல் உடனே நிவாரணம் வாங்கிடு10 கிராமம் போராட்டம் ஆனால் ஆறு கிராமத்திற்கு மட்டுமே நிவாரணம் உள்ளிட்ட விவசாயிகளை பிரித்தாலும் சூழ்ச்சியை மேற்கொள்ளாதே உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியவாறு கண்டன கோஷங்களை எழுப்பினர்.


