திருப்பரங்குன்றம் ஊர் பொதுமக்கள் சார்பாக உண்ணாவிரத போராட்டம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தூணில் தீபம் ஏற்ற திருப்பரங்குன்றம் ஊர் பொதுமக்கள் சார்பாக உண்ணாவிரத போராட்டம் – உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் நடைபெறுகிறது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றக்கோரி மதுரை சேர்ந்த ராம ரவிக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அரசு தரப்பில் மேல்முறையீடுகாக உச்சநீதிமன்றம் சென்றுள்ள நிலையில் காவல்துறை சார்பாக தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென பொதுமக்கள் சார்பாக உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில் இன்று நடத்த நிபதனைகளுடன் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
அதில் 50 பேர் மட்டுமே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் 13ம் தேதி இன்று காலை 9 மணி முதல் 6 மணி வரை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் பகுதியில் காவல்துறையினர் 50க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் திருப்பரங்குன்றம் ரஜினி மன்றம் சார்பாகவும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது..
திருப்பரங்குன்றத்தில் திருப்பரங்குன்றம் ஊர் மக்கள் சார்பாக நடத்தப்படும் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. போராட்டத்தில் முருகன் படத்தின் முன்பு குத்துவிளக்கு ஏற்றி போராட்டம் துவங்கிய.
திருப்பரங்குன்றத்தில் சாலையில் அமர்ந்து உண்ணாவிரதம் போராட்டத்தை தொடங்கினர்.
மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டாம்.., திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவோம்..
தமிழக அரசே இந்து அறநிலையத்துறையே முருக பக்தர்கள் மனதை புண்படுத்தாதே என்ற பதாகைகள் ஏந்தியவாறு போராட்டம் தொடங்கியது..
கந்த சஷ்டி கவசம் பாட பாடப்பட்டு வருகிறது..


