in

தாளமடை சுயம்பு கருப்பண்ணசாமி கோவிலில் மாபெரும் அன்னதானம்

தாளமடை சுயம்பு கருப்பண்ணசாமி கோவிலில் மாபெரும் அன்னதானம்

 

ஒட்டன்சத்திரம் அருகே ஆடிப்பெருக்கை முன்னிட்டு தானா வளர்ந்த தாளமடை சுயம்பு கருப்பண்ணசாமி கோவிலில் 300-க்கும் மேற்பட்ட கிடாய்களை பலி கொடுத்து மாபெரும் அன்னதானம்!!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சோத்தால் நாயக்கன் கோம்பை பகுதியில் தானா வளர்ந்த தாளமடை சுயம்பு கருப்பணசாமி மற்றும்
ஸ்ரீ நீலமலையாண்டிசாமி, ஸ்ரீ நாகம்மாள் ஆகிய கோவில்களில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு கொடுமுடியில் இருந்து தீர்த்த காவடிகள் எடுத்து வரப்பட்டு கிணத்துப்பட்டியில் இருந்து ஸ்ரீ நீலமலையான்டி சிலையுடன் தீர்த்த காவடிகள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு, ஸ்ரீ நீலமலையாண்டி சாமிக்கு தீர்த்தம் செலுத்தப்பட்டு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீ தாளமடை சுயம்பு கருப்பணசாமிக்கும் தீர்த்தம் செலுத்தப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

இந்த தானா வளர்ந்த தாளமடை சுயம்பு கருப்பணசாமி சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் பக்தர்கள் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் பட்சத்தில் நேர்த்திக் கடனாக ஆட்டு கிடாய் பலி கொடுப்பதாக வேண்டிக் கொள்வார்கள்.

அப்படி கோரிக்கைகள் நிறைவேறிய பக்தர்கள் வழங்கும் கிடாய்களை ஆடி மாதம் 18 ஆம் நாள் ஆடிப்பெருக்கை முன்னிட்டு கருப்பண்ணசாமிக்கு பலி கொடுப்பது வழங்குவது வழக்கம்.

அதன்பேரில் இந்த ஆண்டு பக்தர்கள் வழங்கிய 300-க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாய்கள் பலி கொடுக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது.

இந்த விழாவில் திண்டுக்கல், தேனி, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 10,000 மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.

What do you think?

தலையில் தேங்காய் உடைக்கும் வினோத விழா

குறிஞ்சிப்பாடி ச.கு.வேலாயுதம் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி