10, மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கையேடு
10, மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 100% வெற்றி பெற வெற்றி நிச்சயம் வினா விடை கையேடு பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயிலில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வெற்றி நிச்சயம் என்கிற வினா விடை கையேட்டை தமிழக பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
கடந்த ஆண்டு 10 மற்றும் 12 வகுப்பு பொது தேர்வுகலில் தமிழகத்தில் புதிய மாவட்டமான மயிலாடுதுறை 24-வது இடத்தில் இருந்தது.அந்த தேர்ச்சி விழுக்காட்டை முதலிடத்திற்கு கொண்டு வரும் நோக்கில் தி.மு.க.மாவட்ட கழகம் சார்பில மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு வெற்றி நிச்சயம் என்கிற வினா விடை கையேடு வழங்கப்பட்டது.
இந்த கையேடு அரசு, மற்றும்,தனியார் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திமு.க மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் மற்றும் பள்ளி ஆசிரியர் ஆசிரியைகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

