in

நல்லாசிரியர் விருது பெற்ற அரசு பள்ளி ஆசிரியருக்கு  கத்தியால் வெட்டு

நல்லாசிரியர் விருது பெற்ற அரசு பள்ளி ஆசிரியருக்கு  கத்தியால் வெட்டு

 

செஞ்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நல்லாசிரியர் விருது பெற்ற அரசு பள்ளி ஆசிரியரை வழி மறித்து கத்தியால் வெட்டிய மர்ம நபர்கள் குறித்து வளத்தி போலீசார் தீவிர விசாரணை.

முகம் மற்றும் கையில் பலத்த இரத்த காயம் அடைந்த ஆசிரியரை மீட்ட பொதுமக்கள் செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அம்மாக்குளம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (52). இவர் மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பள்ளிக்குச் சென்று விட்டு மாலை செஞ்சிக்கு வந்து விட்டு பின்னர் மீண்டும் இரவு 10 மணி அளவில் அம்மாக்குளம் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்பொழுது நெகனூர் ஏரிக்கரை பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த போது பின் பக்கமாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ஆசிரியர் இளங்கோவன் சென்ற இருசக்கர வாகனத்தை வழி மறித்து அவரை கத்தியால் முகம் மற்றும் கைகளில் வெட்டி உள்ளனர்.

அப்பொழுது இளங்கோவன் தன்னுடைய இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு அலறிக் கொண்டே ஓடி உள்ளார். அவரை துரத்தி சென்ற மர்ம நபர்கள் அவ்வழியாக சாலையில் வாகனங்கள் வருவதைக் கண்டு தங்களுடைய இருசக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.

இதனை அடுத்து பலத்த ரத்த காயம் அடைந்த ஆசிரியர் இளங்கோவனை மீட்ட பொதுமக்கள் செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உள் மருத்துவ பயனாளர் ஆக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த வளத்தி போலீசார் வழிப்பறி செய்வதற்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதும் முன் விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற நல்ல ஆசிரியர் விருது பெற்ற அரசு பள்ளி ஆசிரியரை வழிமறித்து மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி சம்பவம் செஞ்சி சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

மதுபோதையில் லாரியை(ஈச்சர்) இயங்கிய ஒட்டுநர் – புளிய மரத்தின் மோதி விபத்து

மருத்துவ ஆய்வு நிபுணர்கள் கோயம்பேட்டில் திடீர் சாலை மறியல்