பூந்தமல்லியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு
குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வகுமார்(40), காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது இதனை கண்டதும் காரை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி பார்ப்பதற்குள் கார் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதையடுத்து காரில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்தும் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்து பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் ஏதும் செல்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் காரை ஒட்டி வந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பியது குறிப்பிடத்தக்கது.


