in

சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசி கிருத்திகையையொட்டி108 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது.

சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மாசி கிருத்திகையையொட்டி108 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது.

பெரும்பேர் கண்டிகை சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சத்ரு சம்ஹார ஸ்தலமாகவும் அருணகிரிநாதர் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது.

இத்தளத்தில் மாசி மாதம் கிருத்திகையையொட்டி பெரும்பேர் கண்டிகை மலை குன்றின் அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலில் உற்சவரான சிவசுப்பிரமணியருக்கும் வள்ளி தெய்வானைக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றன.

   

108 பால் குடங்களுக்கும் சிறப்பு வழிபாட்டிற்கு பின்னர் பக்தர்கள் பால்குடங்களை சுமந்தபடி மாட வீதிகளில் வளம் வந்து பெரும்பேர் கண்டிகை மலைக்குன்றின் மீது ஏறி கோயிலை வந்தடைந்தனர்.

அதன் பின்னர் மூலவரான வள்ளி தெய்வானையுடன் கூடிய ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமிக்கு 108 பால்குடங்கள் அபிஷேகமும் சிறப்பு அலங்கார ஆராதனையும் நடைபெற்றன.

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டு சென்றனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு விழா குழுவின் சார்பில் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டன.

What do you think?

சட்டமன்றத் தேர்தல் – 2026 ஆலோசனைக் கூட்டம்

12 வயது சிறுவன் அபாயகரமாக படகு ஓட்டும் வீடியோ வைரல்