பொது மக்களுக்கு டீ போட்டுக் கொடுத்து தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ஏழுமலை பொதுமக்களுக்கு டீ போட்டுக் கொடுத்து தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் சி.ஏழுமலை வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு அனுதினமும் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் உள்ள பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள வார்டு எண் 11, 12, 17, 18 மற்றும் 21 ஆகிய ஐந்து வார்டுகளில் பொதுமக்களிடம் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
அப்போது அந்தப் பகுதியில் இருந்த டீ கடையில் பொதுமக்களுக்கு டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார். மேலும் செல்லும் இடமெல்லாம் பாஜக வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பெருமாள் நகர்.ராஜன் உள்ளிட்ட பாமக, தமாக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

