தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வழிநெடுகிலும் பொதுமக்கள் மாணவ மாணவிகள் தமிழகம் முதல்வருடன் கைகுலுக்கி சுயபடம் எடுத்துக் கொண்டனர்:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இன்று மாலை சீர்காழி,மயிலாடுதுறை, பூம்புகார்,நாகப்பட்டினம்,வேதாரண்யம் கீழ்வேளூர்’
ஆகிய சட்டமன்ற தொகுதி திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் இன்று மாலை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறுகிறது
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று இரவு புதுச்சேரி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு தமிழக முதல்வர் திருவெண்காட்டில் உள்ள அவரது மாமனார் இல்லத்திற்கு வருகை தந்தார் தொடர்ந்து.
இன்று காலை சீர்காழி தென்பாதி தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் இருந்து நடைப்பயிற்சியை தொடங்கினார் .
அங்கு உள்ள உழவர் சந்தைக்கு மு.க ஸ்டாலின் சென்று காய்கறி விற்பனையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் விற்பனை குறித்தும் அவர்களுக்குள்ள குறைகள் குறித்தும் கேட்டறிந்தார் தொடர்ந்து வழிநெடுக்கிலும் பொதுமக்கள் மு.க ஸ்டாலின் உடன் சுயபடம் எடுத்தும் கைக்குலுக்கியும் மகிழ்ந்தனர்.
பின்னர் கச்சேரி சாலை அரசு மருத்துவமனை சாலை விகாரி மேலவீதி,பிடாரி வடக்கு வீதி பழைய பேருந்து நிலையம் ஆகிய சாலைகளின் வழியே மக்களை சந்தித்தவாறு நடைபயிற்சி செய்தார்.
சீர்காழி அரசு மருத்துவமனை அருகில் கூடியிருந்த மக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து கூறினர்.
நடைப்பயிற்சி மேற்கொண்ட ஸ்டாலின் சாலையில் இருந்த தேநீர் கடைக்கு திடீரென சென்று தேநீர் அருந்தினார் தேனீர் வழங்கிய ஊழியரிடம் வியாபாரம் எவ்வாறு உள்ளது என கேட்டறிந்தார்.
அங்கு வந்த மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடி சுயபடம் எடுத்துக் கொண்டனர் அங்கிருந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.
சாலையில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவிகளை பார்த்த முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தனது நடைபயிற்சி நிறுத்தி அவர்களிடம் ஆர்வமாக கலந்துரையாடினார் மேலும் சாலையோரம் இருந்த மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ,சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம்,நகர செயலாளர் சுப்பராயன்,ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன்,பஞ்சு குமார்,முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் உடன் நடந்து வந்தனர்.


