in

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சாலை வலமாக பிரதமர் அஜந்தா சிக்கனலிருந்து ராஜா தியேட்டர் சிக்னல் வரை பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஒரே கிலோமீட்டர் தூரம் திறந்தவெளி ஜீப்பில் சாலை வலமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

புதுச்சேரி விமான நிலையம் வருகை புரிந்த பிரதமரை புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி வரவேற்பு அளித்தார்.

அஜந்தா சிக்னலில் தொடங்கிய சாலை வலத்தில் திறந்தவெளி ஜீப்பில் மோடி சாலைகளின் ஓரத்திலிருந்த தொண்டர்களை பார்த்தவாறு கையசைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது மோடியின் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சாலை வலமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மோடிக்கு சாலை ஓரங்களில் கலைநிகழ்ச்சி மற்றும் மலர்தூவி தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

ஒரு கிலோ மீட்டர் சால வலத்தில் அமைக்கப்பட்டுருந்த தடுப்புகளில் தொண்டர்கள் பாஜக, என் ஆர் காங்கிரஸ், அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி கொடிகளை கையில் ஏந்தி வரவேற்றனர்.

இந்த சாலை வலமானது 40 நிமிடங்கள் நடைபெற்றதில் தொண்டர்கள் மோடி மோடி என கோஷங்களை எழுப்பினர்.

அஜந்தா சந்திப்பில் இருந்து தொடங்கிய சாலைவலம் பட்டேல்சாலை,அண்ணாசாலை,
தியாகராஜர் வீதி, பெருமாள் கோயில் வீதி, முத்துமாரியம்மன் கோவில் வீதி,
ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட பத்துவீதிகளை கடந்து ராஜா தியேட்டர் சிக்னலில் மோடியின் சாலை வலம் நிறைவு பெற்றது.

What do you think?

தேர்தல் களம் சூடு பிடித்தது அதிமுக வேட்பாளர் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் அதிமுகவில் இணைந்தனர்…