in

தேர்தல் களம் சூடு பிடித்தது அதிமுக வேட்பாளர் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் அதிமுகவில் இணைந்தனர்…

தேர்தல் களம் சூடு பிடித்தது அதிமுக வேட்பாளர் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் அதிமுகவில் இணைந்தனர்…

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் காஞ்சிபுரம் தொகுதியில் அரசியல் கட்சியினர் பல்வேறு வியூகம் எடுத்து பணிகளை தீவிரப் படுத்தி உள்ளனர்.

அதுல ஒரு பகுதியாக காஞ்சிபுரம் பகுதியில் உள்ள ரஜினி ரசிகர் மன்றத்தினர் அதிமுகவில் இணைந்தனர்.

காஞ்சிபுரம் அதிமுக பகுதி செயலாளர் கே.யூ.எஸ். சோமசுந்தரம் ஏற்பாட்டில் ரஜினி ரசிகர் மன்ற நகர செயலாளர் கே.செல்வராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரளாக இணைந்தனர்.

மேலும் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமன வி.சோமசுந்தரம் அதிமுகவில் இணைந்த ரஜினி ரசிகர்களுக்கு அக்கட்சியின் சால்வை அறிவித்து உற்சாகமாக வரவேற்றார்.

மேலும் இணைப்பு குறித்து ரஜினி ரசிகர் மன்ற நகர தலைவர் கே.செல்வராஜ் செய்தியாளிடம்.

கூறுகையில், அதிமுக காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வி சோமசுந்தரம் அவர்கள் நேர்மையையும் எளிமையான அணுகுமுறையும் தங்களை கவர்ந்துள்ளது.

என்றும் அவர் கைத்தறி துறை அமைச்சராக இருந்தபோது காஞ்சிபுரம் தொகுதிக்கு ஏராளமான மக்கள் நல பணிகளை செய்துள்ளார்.

எனவே வரவிருக்கும் தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்து அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம் என கூறினார்.

மேலும் காஞ்சிபுரம் தொகுதியில் திமுக அதிமுக இடையே நேரடி போட்டி நடைபெறும் சூழலில் ரஜினி ரசிகர்களின் இந்த ஆதரவு அதிமுக முகாமிற்கு கூடுதல் பலத்தை சேர்த்ததாக கூறப்படுகின்றது.

மேலும் இவர்கள் உடனடியாக தேர்தல் பிரச்சாரக் களத்தில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்நிகழ்வின் போது அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளர் திலக்குமார், மாநகர அம்மா பேரவை செயலாளர் மாணிக்கம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இருந்தனர்.

What do you think?

கீர்த்தி சுரேஷின் ‘ரகசிய’ பழக்கம்,ரகசியத்தை உடைத்த சமந்தா!நிஜ வாழ்க்கையில் கீர்த்தி எப்படிப்பட்டவர்?

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி.