in

புதுச்சேரி..பிரதமர் நரேந்திர மோடி நாளை ஒரு மணி நேரம் ரோடு ஷோ..30 ஆயிரம் பேர் பங்கேற்பு

புதுச்சேரி..பிரதமர் நரேந்திர மோடி நாளை ஒரு மணி நேரம் ரோடு ஷோ..
30 ஆயிரம் பேர் பங்கேற்பு…மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க பிரதமர் வருகை உதவும்..உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி ..

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி நாளை வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்ய புதுச்சேரிக்கு வருகிறார்.நாளை மாலை 4.15 மணிக்கு விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து அஜந்தா சிக்னல் சந்திப்பு வந்து ரோடு ஷோவை தொடங்குகிறார்.

அண்ணா சாலை வழியாக அண்ணா திடல் வரை 1.7 கி.மீ. துாரத்துக்கு இந்த ரோடு ஷோ சுமார் ஒரு மணி நேரம் நடக்கிறது.இதில் சுமார் 30 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். பிரதமரின் வருகை மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க உதவும் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடும் அவர் இன்று சோம்பட்டு கிராமத்தில் வாக்கு சேகரித்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்..புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது ..அதற்கு ஏற்க பிரதமரின் வருகை மற்றும் பிரச்சாரம் ஆட்சி அமைவதை உறுதி செய்யும் என்றார் …

What do you think?

மாநில அந்தஸ்து தருவது பற்றி பிரதமர் புதுச்சேரியில் பதில் தரவேண்டும் காங்கிரஸ் பொதுச்செயலர் முகுல் வாஸ்னிக் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி மூன்றாம்கட்ட வேட்பாளர் பட்டியல் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தலைவர்