நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இப்போ ஒரு புது அவதாரம் எடுத்திருக்காரு! மாயம், கிராமத்து வாழ்க்கை, மனுஷங்களோட குணம்னு எல்லாத்தையும் கலந்து “முத்து என்கிற காட்டான்” அப்படிங்கிற ஒரு வித்தியாசமான வெப் தொடரோட வராரு.
மணிகண்டன் மற்றும் அஜித்குமார் சேர்ந்து இயக்கியிருக்கிற இந்தத் தொடர், ரிலீஸ்க்கு முன்னாடியே செம ஹைப் ஏத்திருக்கு!
இதுல விஜய் சேதுபதி கூட மலையாள ஸ்டார் இர்ஷாத் அலி, பாலிவுட் நடிகர் மிலிண்ட் சோமன், நம்ம சிங்கம் புலி, வேட்டை முத்துக்குமார்னு ஒரு பெரிய பட்டாளமே நடிச்சிருக்காங்க.
இதுல ஹைலைட் என்னன்னா, விஜய் சேதுபதியே அவரோட ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ மூலமா இதைத் தயாரிச்சிருக்காரு.
நாளைக்கு (மார்ச் 27) ஜியோ ஹாட்ஸ்டார்ல இந்தத் தொடர் ரிலீஸ் ஆகுது. இதோட ப்ரோமோஷன்ல பேசுன விஜய் சேதுபதி, வழக்கம் போல தன்னோட எதார்த்தமான பேச்சால மேடையையே கலகலக்க வச்சிட்டாரு.
முதல்ல, ஜியோ ஹாட்ஸ்டார் பிரதீப் சாருக்கு நன்றி சொன்னவரு, “சிம்பு, சூர்யா மாதிரி எக்ஸ்பீரியன்ஸ் ஆனவங்க இருக்கும்போது என்னை ‘பிக் பாஸ்’ பண்ண வச்சதுக்கு தேங்க்ஸ்”னு சொல்லவும் அரங்கமே சிரிப்புல நிறைஞ்சது.
அப்புறம் வி.ஜே. பார்வதி பத்தி பேசும்போது, “பார்வதி பத்தி பேச ஒண்ணும் இல்லப்பா..
வாரம் வாரம் பேசி சலிச்சு போயிட்டேன். ஆனா அவங்க மேல உங்களுக்கு இருக்குற தப்பான அபிப்ராயம் இந்தத் தொடரை பார்த்ததுக்கப்புறம் மாறிடும்.
கண்டிப்பா அவங்களை உங்களுக்குப் பிடிக்கும்”னு சர்டிபிகேட் கொடுத்திருக்காரு. இதுல பார்வதி ‘லலிதா’ங்கிற வெயிட்டான ரோல்ல நடிச்சிருக்காங்களாம்.
அடுத்து முத்து குமரன் பத்தி பேசுன சேது, “முத்து சூப்பரா நடிச்சிருக்காரு. அவரை கார்த்திக் சுப்புராஜ், மணிகண்டன் மாதிரி பெரிய டைரக்டர்ஸ் கிட்ட அறிமுகப்படுத்துறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்”னு சொல்லி ஒரு பெரிய வாய்ப்புக்கே வழி பண்ணிக் கொடுத்திருக்காரு.
இதுதான் நம்ம விஜய் சேதுபதி! கூட இருக்கிறவங்களையும் உயர்த்தி விடுறதுல அவர் எப்பவுமே கெத்துதான்.விஜய் சேதுபதி – மணிகண்டன் கூட்டணி ஏற்கனவே ‘ஆண்டவன் கட்டளை’, ‘கடைசி விவசாயி’னு மேஜிக் பண்ணிருக்காங்க.
இப்போ இந்த ஓடிடி (OTT) தொடர்லயும் அந்த மேஜிக் நடக்கும்னு ஃபேன்ஸ் ஆவலா காத்துட்டு இருக்காங்க.
