90ஸ் கிட்ஸ் முதல் இப்போ இருக்குற குட்டீஸ் வரை எல்லாருக்குமே பிடிச்ச அந்த மந்திர உலகம் மறுபடியும் உயிர் பெற்று வருது! ஜே.கே. ரௌலிங் எழுதின அந்த மாயாஜால கதைகளை வச்சு ஏற்கனவே 8 படங்கள் வந்து உலகத்தையே மிரட்டுச்சு.
இப்போ அதே கதையை இன்னும் டீப்பா, ஒரு செம பிரம்மாண்டமான வெப் சீரிஸா கொண்டு வர்றாங்க வார்னர் பிரதர்ஸ்!
இந்த சீரிஸோட ஃபர்ஸ்ட் டீசர் இப்போ வெளியாகி இன்டர்நெட்டையே அதிர வச்சிருக்கு.இதுல நடிக்குற புது காஸ்டிங் (Casting) தான் இப்போ பெரிய விவாதமே!
டொமினிக் மெக்லாலின் – ஹாரி பாட்டர், அலாஸ்டர் ஸ்டவுட் – ரான் வீஸ்லி, அரபெல்லா ஸ்டாண்டன் – ஹெர்மியோன் கிரேஞ்சர், டேனியல் ராட்க்ளிஃப், எம்மா வாட்சன் செட் பண்ணுன அந்த ‘பெஞ்ச்மார்க்’ கை இவங்க எப்படி ரீச் பண்ணப்போறாங்கன்னு பார்க்க ரசிகர்கள் செம வெயிட்டிங்!
அதுமட்டும் இல்லாம, முக்கியமான ரோல்ஸுக்கும் பெரிய ஆட்களைப் பிடிச்சிருக்காங்க. ஜான் லித்கோ ‘டம்பிள்டோர்’ ஆகவும், பாப்பா எசிடு ‘ஸ்னேப்’ ஆகவும் நடிக்கிறாங்க.
குறிப்பா ஆலன் ரிக்மன் பண்ண அந்த ஸ்னேப் கேரக்டரை பாப்பா எசிடு எப்படி பண்ணப்போறாருன்னு இப்போதே ஃபேன்ஸ் மத்தியில பெரிய எதிர்பார்ப்பு கிளம்பிருக்கு.படமா எடுக்கும்போது நேரமின்மை காரணமா நாவல்ல இருந்த நிறைய விஷயங்களை விட்டுட்டாங்க.
ஆனா இந்த வெப் சீரிஸ்ல அப்படி கிடையாது! முதல் சீசன் ‘பிலாசபர்ஸ் ஸ்டோன்’ (Philosopher’s Stone) நாவலை அப்படியே அணு அணுவா செதுக்கப்போறாங்களாம்.
மொத்தம் 8 எபிசோட்கள்! படத்துல பார்க்காத பல சீன்களை இதுல பார்க்கலாம்னு டைரக்டர் மார்க் மைலோட் சொல்லியிருக்காரு.டீசர்ல வர்ற அந்த ஹோக்வார்ட்ஸ் கோட்டை, புது CGI காட்சிகள், அப்புறம் அந்த ஐகானிக் மியூசிக்..
அப்பா! அப்படியே நம்ம சின்ன வயசுக்கு கூட்டிட்டு போகுது. இந்த சீரிஸோட முதல் சீசன் வர்ற டிசம்பர் 25, 2026 அன்னைக்கு ரிலீஸ் ஆகுது. கிறிஸ்மஸ் அன்னைக்கு ஹோக்வார்ட்ஸ் பனிப்பொழிவுல ஹாரி பாட்டரை பார்க்குறது ஒரு தனி ஃபீல் தான்ல!
“நம்ம சைல்ட்ஹுட் மெமரிஸ் திரும்ப வருது!” னு இப்போவே சோசியல் மீடியாவுல ஹேஷ்டேக் போட்டு ஹைப் ஏத்த ஆரம்பிச்சுட்டாங்க ஃபேன்ஸ். 2026-ல மந்திர உலகம் திரும்பவும் தன் கதவுகளைத் திறக்க ரெடி ஆகிருச்சு!

