in

நெய்வேலியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி.

நெய்வேலியில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி.

நெய்வேலி சட்டமன்ற தொகுதி வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நெய்வேலி மெயின் பஜாரில் நடைபெற்றது. தனி துணை ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலர் சண்முகவள்ளி தலைமை தாங்கினார். என்எல்சி பள்ளிக்கல்வித்துறை துணை பொது மேலாளர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு விருந்தினராக என்எல்சி நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஜாஸ்பர்  ரோஸ் கலந்து கொண்டு   விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த பேரணியில் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி நெய்வேலி மெயின் பஜார் காந்தி சிலையில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் வாக்காளர் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் மற்றும் வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக் கடமைபோன்ற வாசகங்களை எழுதியும், கோஷமிட்டும் சென்றனர்.

மேலும் பொதுமக்கள் முன்னிலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் என்எல்சி நில எடுப்பு துறை முதன்மை பொது மேலாளர் சீனிவாச ராகவன்,  தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ஜெயசீலன், தாசில்தார்கள் ரவிச்சந்திரன், ஷாநஸ், துணை வட்டாட்சியர் முருகேஸ்வரி, தேவகிதேவி, வருவாய் துறையினர், பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

What do you think?

மதுரவாயலில் 1 கொடியை 13 லட்சம் ரூபாய் தேர்தல் பறக்கும் படையினரால் பரிமுதல்

காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தங்கள் மீது பொய் குற்றசாட்டு சுமத்துவதாக தவெக பெண் நிர்வாகி புகார்.