பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் 83 ஆம் ஆண்டு ராமநவமி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி சிறப்பு நடைபெற்றது.
தேனி அருகே அல்லிநகரத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
அல்லிநகரம் கிராம கமிட்டிக்கு பாத்தியப்பட்ட இத்திருக்கோயிலில் இன்று 83 ஆம் ஆண்டு ஸ்ரீ ராம நவமி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக கோயில் வளாகத்தில் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் மூலவர் பெருமாளுக்கும், உற்சவருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தூபம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து கொடிக்கம்பத்திற்கும், கொடி பட்டத்திற்கும் வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் செய்து பின்னர் கோயில் உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து கொடிபட்டத்திற்கு குங்குமம், சந்தனம் வைத்து துளசி மாலைகளால் வழிபட்டனர் பின்னர் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து ராமநவமி பிரம்மோற்சவ விழாவிற்காக கோயில் வளாகத்தில் பந்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட பந்தகாலை பக்தர்கள் சுமந்து கொண்டு பந்தகால் நடப்பட்டது பின்னர் பொதுமக்கள் பாலை ஊற்றி பந்தகாலை வணங்கி வழிபட்டனர்.

